என் பழைய கவிதைகளை நான் எழுதி வைக்கவில்லை. ஆனால் என் மனதில் இருந்து சில...
என் முதல் கவிதை, என் நண்பனின் காதலுக்காக நான் எழதி தந்தது... ( ஆனால் இந்த கவிதையை அவன் கொடுக்கும் முன்னர் அந்த பெண் இவனுக்கு கல்யாண பத்திரிகை தந்தது வேறு கதை.)
என் முதல் கவிதை, என் நண்பனின் காதலுக்காக நான் எழதி தந்தது... ( ஆனால் இந்த கவிதையை அவன் கொடுக்கும் முன்னர் அந்த பெண் இவனுக்கு கல்யாண பத்திரிகை தந்தது வேறு கதை.)
இதோ அந்த கவிதை ...
கண்டவரை மயக்கும் கார்முகிலே
கண்டதில்லை காப்பியமும் உன்னழகை
காண்கின்ற கண்கள் எல்லாம் காமம் ஊரும்
காணாத கண் செய்த பாவம் என்ன ?
பால்போன்ற உன்னழகு பவழமேனி
பார்த்திருந்தால் பசி ஏது எனகுமடி
சங்கதமிழாய் இனிக்கின்ற சங்கீதமே
சங்கமம் எப்போது நமக்குள் சங்கீதா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக